தமிழ் அரங்கம்

கவிதைகள்
புதைந்து விடுவேனோ . . .

நண்பா !
கூட்டலும் கழித்தலுமாய்
என் வாழ்க்கை
சந்தோசத்தை பெருக்கி
சோகத்தை வகுக்க பார்த்தேன்
இந்த கணக்கு எனக்கு புரியவில்லை
புரிந்திருந்தால் . . .
தென்றலாய் வசந்தம் வீசிக் கொண்டிருப்பேன்
புரியாததால் . . .
புதைந்து போய் விடுவேனோ . . .
என வருத்தப் பட்டுகொண்டிருக்கிறேன் . ,

 

அதே முகம் . . .

வித விதமாய் கோணங்களில்
என்னைப் பார்க்க ஆசை
அத்தனையும் நிறைவேற ஆசைப்பட்டேன்
கனவில் தான் முடியுமோ
இல்லை
நியாபகம் வந்தனர் நடிகர்கள்
முடிவெடுத்தேன்
அத்தனை வேஷங்களிலும்
வித விதமாய் புகைப்படம் எடுத்து
வீட்டில் பதித்துவைத்தேன்
ஒவ்வொரு நாளும் எழுந்து வதேன்
வீடெங்கும் என் முகம்
அவேசப்பட்டேன்
அதிரடியாய் அனைத்தையும் விட்டெறிந்தேன்
கண்ணாடி முன் வந்து நின்றேன்
அதே முகம்
விட்டெறிய முற்பட்டேன்
முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றேன்
சோகத்துடன் . . .

ரோஜா மலர்…

வெட்கம் என்ன என்னவளே …

நீ

பதியம் போடப் பட்டாய்

தளிர் விடவல்லவா நேரம் எடுத்து கொண்டாய்

துளிர் விட்டதும்

மெல்ல சிரித்தாய்

வளர்ந்து விட்டாய் – உன்னில் புன் சிரிப்பு

பூத்தும் விட்டாய்

ஆனால் இன்று ஏன் வெட்கப் பட்டாயோ …

உன் பூ இதழ்கள் இழந்ததலோ …

உன்னில் மென்மை கண்டேன்

அழகும் கண்டேன் அன்பும் கண்டேன்

என்னவளே நீயல்லவோ பெண்மையின் பிறப்பிடமும் இருப்பிடமும்

வாழ்க உன் புகழ்

என் உயிர் ரோஜா பூவே …


உன்னுலகம் . . .

நண்பா !

 நீ பெண்ணை நேசிப்பது நிஜம் என்றால்

அவளை உன் கண்ணை போல் நேசி

அவள் உன்னை நேசிப்பது உண்மை என்றால்

உன் இமையை போல ஓடி வருவாள்

அப்போது

விண்ணுலகம் மண்ணுலகம்

என்ன எவ்வுலகமும்

உன்னுலகம்

நான் உன் உயிர் . . .

கனவு கண்டேன்,
என் கண்ணே…
இது நடக்குமோ, இல்லையோ
ஆனால் உண்மை, இது நிச்சயம்
எவ்வளவோ கனவுகள்

எத்தனையோ இரவுகள்
தூக்கம் இல்லை, ஆனால்

துயரமும் இல்லை
எல்லாம் இழந்துவிடுவேனோ என என்னை அறியாது ஒரு பயம்
ஆனால் உண்மை,
நீ சொல்லும் ஒரு வார்த்தை தான்
என்னை ஏஙக விடாதே
ஒருமுறை பொய்யாவது சொல்லிவிடு
“நான் உன்னவள்” என்று
‘உன் உயிர்’ என்று – அந்த ஒரு வார்த்தையில்
எந்த கஷ்டத்தையும் தவிடு பொடியாக்குவேன்
ஏன் –

நான் உன் மேல் உயிராய் . . .

 

Make a Free Website with Yola.